126 நிறையழிதல்

நிறையழிதல் பால்: காமத்துப்பால். இயல்: கற்பியல். அதிகாரம்: நிறையழிதல். குறள் 1251: காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்நாணுத்தாழ் வீழ்த்த கதவு. மணக்குடவர் உரை:காமமாகிய மழு உடையாநின்றது: நாணமாகிய தாழில் அடைக்கப்பட்ட அறிவாகிய கதவினை. இஃது அறிவும் நாணமும் உடையார் இவ்வாறு செய்யாரென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது. பரிமேலழகர் உரை:(நாணும் நிறையும் அழியாமை நீ ஆற்றல் வேண்டும் என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) நாணுத்தாழ் வீழ்த்த நிறை என்னும் கதவு – நாணாகிய தாழினைக் கோத்த நிறை என்னும் …

126 நிறையழிதல் Read More »