059 ஒற்றாடல்

ஒற்றாடல் பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: ஒற்றாடல். குறள் 581: ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்தெற்றென்க மன்னவன் கண். மணக்குடவர் உரை:ஒற்றினையும் முறையமைந்த நூலினையும் தெளியவறிந்த மன்னவனுக்கு இவையிரண்டையும் கண்களாகத் தெளிக. அரசர்க்குக் கல்வி இன்றிமையாததுபோல ஒற்றும் இன்றிமையாததென்றவாறு. இஃது ஒற்றுவேண்டுமென்றது. பரிமேலழகர் உரை:ஒற்றும் உரைசான்ற நூலும் இவை இரண்டும் – ஒற்றும் புகழமைந்த நீதிநூலுமாகிய இவை இரண்டனையும்; மன்னவன்கண் தெற்றென்க – அரசன் தன் இரண்டு கண்ணுமாகத் தெளிக. (ஒற்றுத் தன் கண் செல்லமாட்டாத …

059 ஒற்றாடல் Read More »