014 ஒழுக்கமுடைமை

ஒழுக்கமுடைமை பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: ஒழுக்கமுடைமை. குறள் 131: ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்உயிரினும் ஓம்பப் படும். மணக்குடவர் உரை:ஒழுக்கமுடைமை சீர்மையைத் தருதலானே, அவ்வொழுக்கத்தைத் தனது உயிரைக் காட்டினும் மிகக் காக்க வேண்டும். இஃது ஒழுக்கம் மேற்கூறிய நன்மையெல்லாந் தருமாதலின், அதனைத் தப்பாமற் செய்யவேண்டுமென்று வலியுறுத்திற்று. பரிமேலழகர் உரை:ஒழுக்கம் விழுப்பம் தரலான் – ஒழுக்கம் எல்லார்க்கும் சிறப்பினைத் தருதலான், ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் – அவ்வொழுக்கம் உயிரினும் பாதுகாக்கப்படும். (உயர்ந்தார்க்கும் இழிந்தார்க்கும் ஒப்ப விழுப்பம் …

014 ஒழுக்கமுடைமை Read More »