078 படைச்செருக்கு

படைச்செருக்கு பால்: பொருட்பால். இயல்: படையியல். அதிகாரம்: படைச்செருக்கு. குறள் 771: என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னைமுன்நின்று கல்நின் றவர். மணக்குடவர் உரை:என்னுடைய ஐயன் முன்னர்ப் பகைவீரரே! நில்லாது ஒழிமின்; முன்னாள் இவன் முன்னே நின்று, கல்லிலே எழுதப்பட்டு நிற்கின்றார் பலராதலால் என்றவாறு. இஃது எளியாரைப் போகச் சொல்லி, எதிர்ப்பாரோடு பொரவேண்டும் என்றது. பரிமேலழகர் உரை:தெவ்விர் என் ஐ முன் நின்று கல் நின்றவர் பலர் – பகைவீர்,இன்று இங்கு என் தலைவன் எதிர் போரேற்று நின்று …

078 படைச்செருக்கு Read More »