088 பகைத்திறந்தெரிதல்

பகைத்திறந்தெரிதல் பால்: பொருட்பால். இயல்: நட்பியல். அதிகாரம்: பகைத்திறந்தெரிதல். குறள் 871: பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்நகையேயும் வேண்டற்பாற்று அன்று. மணக்குடவர் உரை:பகை யென்று சொல்லப்படுகின்ற குணமில்லாததனை, ஒருவன் விளையாட்டின்கண்ணும் விரும்பற்பாலதன்று. இஃது எவ்விடத்தும் பகைகோடல் தீது என்றது. பரிமேலழகர் உரை:பகை என்னும் பண்பு இலதனை – பகை என்று சொல்லப்படும் தீமை பயப்பதனை; ஒருவன் நகையேயும் வேண்டற்பாற்று அன்று – ஒருவன் விளையாட்டின் கண்ணேயாயினும் விரும்புதல் இயற்கைத்தன்று. (மாணாத பகையை ஆக்கிக் கோடல் எவ்வாற்றானும் தீமையே …

088 பகைத்திறந்தெரிதல் Read More »