020 பயனில சொல்லாமை

பயனில சொல்லாமை பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: பயனில சொல்லாமை. குறள் 191: பல்லார் முனியப் பயனில சொல்லுவான்எல்லாரும் எள்ளப் படும். மணக்குடவர் உரை:பயனில்லாதவற்றைப் பலர் வெறுக்கச் சொல்லுபவன் எல்லாராலும் இகழப்படுவான். பரிமேலழகர் உரை:பல்லார் முனியப் பயன் இல சொல்லுவான் – அறிவுடையார் பலரும் கேட்டு வெறுப்பப் பயன் இலவாகிய சொற்களைச் சொல்லுவான், ‘எல்லாரும் எள்ளப்படும்’ – எல்லாரானும் இகழப்படும். (அறிவுடையார் பலரும் வெறுப்பவே, ஒழிந்தாரானும் இகழப்படுதலின், எல்லாரும் எள்ளப்படும் என்றார். மூன்றன் உருபு விகாரத்தால் …

020 பயனில சொல்லாமை Read More »