091 பெண்வழிச்சேறல்

பெண்வழிச்சேறல் பால்: பொருட்பால். இயல்: நட்பியல். அதிகாரம்: பெண்வழிச்சேறல். குறள் 901: மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்வேண்டாப் பொருளும் அது. மணக்குடவர் உரை:மனையாளைக் காதலித்தொழுகுவார் நற்பயனைப் பெறார்: யாதானும் ஒருவினையைச் செய்து முடிக்கவேண்டுவார் விரும்பாத பொருளும் அவரை விழையாமை. இஃது அறத்தினும் பொருளினும் காதலின்றி அவர்தம்மையே காதலிப்பார்க்கு அறனும் பொருளும் இல்லையாமென்றது. பரிமேலழகர் உரை:மனை விழைவார் மாண் பயன் எய்தார் – இன்பம் காரணமாகத் தம் மனையாளை விழைந்து அவள் தன்மையராய் ஒழுகுவார், தமக்கு இன்துணையாய அறத்தினை …

091 பெண்வழிச்சேறல் Read More »