090 பெரியாரைப் பிழையாமை

பெரியாரைப் பிழையாமை பால்: பொருட்பால். இயல்: நட்பியல். அதிகாரம்: பெரியாரைப் பிழையாமை. குறள் 891: ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்போற்றலுள் எல்லாம் தலை. மணக்குடவர் உரை:தவத்தினாலும் வலியினாலும் பெரியாரது வலியை இகழாதொழிதல், தம்மைக் காப்பார்க்குக் காவலாகிய எல்லாவற்றுள்ளும் தலையான காவலாம். இது பெரியாரைப் பிழையாமையால் வரும் பயன் கூறிற்று. பரிமேலழகர் உரை:ஆற்றுவார் ஆற்றல் இகழாமை – எடுத்துக்கொண்டன யாவும் முடிக்க வல்லார்களுடைய ஆற்றல்களை அவமதியாமை; போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை – தங்கண் தீங்கு வாராமல் காப்பார் …

090 பெரியாரைப் பிழையாமை Read More »