015 பிறனில் விழையாமை

பிறனில் விழையாமை பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: பிறனில் விழையாமை. குறள் 141: பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்துஅறம்பொருள் கண்டார்கண் இல். மணக்குடவர் உரை:பிறனுடைய பொருளாயிருப்பவளை விரும்பி யொழுகுகின்ற அறியாமை உலகத்து அறமும் பொருளும் அறிந்தார் மாட்டு இல்லையாம். பரிமேலழகர் உரை:பிறன் பொருளாள் பெட்டு ஒழுகும் பேதைமை – பிறனுக்குப் பொருளாம் தன்மையுடையாளைக் காதலித்து ஒழுகுகின்ற அறியாமை, ஞாலத்து அறம் பொருள் கண்டார் கண் இல் – ஞாலத்தின்கண் அறநூலையும் பொருள் நூலையும் ஆராய்ந்து அறிந்தார்மாட்டு …

015 பிறனில் விழையாமை Read More »