116 பிரிவாற்றாமை

பிரிவாற்றாமை பால்: காமத்துப்பால். இயல்: கற்பியல். அதிகாரம்: பிரிவாற்றாமை. குறள் 1151: செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்வல்வரவு வாழ்வார்க் குரை. மணக்குடவர் உரை:காதலர் போகாமையுண்டாயின் எனக்குக் கூறு பிரிந்தார் நீட்டியாது விரைந்து வருவாரென்று சொல்லுகின்ற வரவினைப் பின்புளராய் வாழ்வார்க்குக் கூறு. இது கடிதுவருவாரென்ற தோழிக்குத் தலைமகள் ஆற்றாமையாற் கூறியது. பரிமேலழகர் உரை:(பிரிந்து கடிதின் வருவல் என்ற தலைமகற்குத் தோழி சொல்லியது.) செல்லாமை உண்டேல் எனக்கு உரை – நீ எம்மைப் பிரியாமை உண்டாயின் அதனை எனக்குச் சொல்; …

116 பிரிவாற்றாமை Read More »