123 பொழுதுகண்டிரங்கல்

பொழுதுகண்டிரங்கல் பால்: காமத்துப்பால். இயல்: கற்பியல். அதிகாரம்: பொழுதுகண்டிரங்கல். குறள் 1221: மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்வேலைநீ வாழி பொழுது. மணக்குடவர் உரை:பொழுதே! நீ வெப்பமுடையை யானமையான் மாலையோ எனின் அல்லை: முன்பு கூடிப் பிரியப்பட்டார் உயிரை உண்பதாகியவொரு வேலாயிருந்தாய். இது மாலைப்பொழுது கண்டு தலைமகள் ஆற்றாமையாற் கூறியது. பரிமேலழகர் உரை:(பொழுதொடு புலந்து சொல்லியது.) பொழுது – பொழுதே; நீ மாலையோ அல்லை – நீ முன்னாள்களின் வந்த மாலையோ எனின் அல்லை; மணந்தார் உயிர் உண்ணும் …

123 பொழுதுகண்டிரங்கல் Read More »