026 புலான்மறுத்தல்

புலான்மறுத்தல் பால்: அறத்துப்பால். இயல்: துறவறவியல். அதிகாரம்: புலான்மறுத்தல். குறள் 251: தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்எங்ஙனம் ஆளும் அருள். மணக்குடவர் உரை:தன்னுடைம்பை வளர்த்ததற்குத் தான் பிறிதொன்றினது உடம்பை உண்ணுமவன் அருளுடையவனாவது மற்றியா தானோ? ஊனுண்ண அருள்கெடுமோ என்றார்க்கு இது கூறப்பட்டது. பரிமேலழகர் உரை:தன் ஊன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண்பான் – தன் உடம்பை வீக்குதற் பொருட்டுத் தான் பிறிதோர் உயிரின் உடம்பைத் தின்பவன், எங்ஙனம் ஆளும் அருள் – எவ்வகையான் நடத்தும் அருளினை? …

026 புலான்மறுத்தல் Read More »