132 புலவி நுணுக்கம்

புலவி நுணுக்கம் பால்: காமத்துப்பால். இயல்: கற்பியல். அதிகாரம்: புலவி நுணுக்கம். குறள் 1311: பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்நண்ணேன் பரத்தநின் மார்பு. மணக்குடவர் உரை:என் புலவியைச் சாகவிட்டிருக்க வல்லாரோடு என்னெஞ்சு, கூடுவேமென்று நினைக்கின்றது தன்னாசைப்பாட்டால். இத புலவி நீங்கவேண்டுமென்ற தோழிக்குத் தலைமகள் புலவி தீர்வாளாய்ச் சொல்லியது. பரிமேலழகர் உரை:(உலாப்போய் வந்த தலைமகன் பள்ளியிடத்தானாகத் தலைமகள் சொல்லியது.) பரத்த – பரத்தைமையுடையாய்; பெண் இயலார் எல்லாரும் கண்ணின் பொதுவுண்பர் – நின்னைப் பெண் இயல்பினையுடையார் யாவரும் தம் …

132 புலவி நுணுக்கம் Read More »