131 புலவி

புலவி பால்: காமத்துப்பால். இயல்: கற்பியல். அதிகாரம்: புலவி. குறள் 1301: புல்லா திராஅப் புலத்தை அவர்உறும்அல்லல்நோய் காண்கம் சிறிது. மணக்குடவர் உரை:நம் காதலர் வந்தால் புல்லாதிருந்து புலத்தல் வேண்டும்: அவ்விடத்து அவருறும் கலக்கத்தை யாம் சிறிது காண்பேமாக. இது வாயில் வேண்டிச் சென்ற தோழி தலைமகள் புலவிக் குறிப்புக் கண்டு முகங்கொடாமைப் பொருட்டு இனிமை கூறியது. பரிமேலழகர் உரை:(வாயிலாகச் சென்ற தோழி தலைமகள் வாயில் நேர்தற்பொருட்டு அவளொடு நகையாடிச் சொல்லியது.) அவர் உறும் அல்லல் நோய் …

131 புலவி Read More »