019 புறங்கூறாமை

புறங்கூறாமை பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: புறங்கூறாமை. குறள் 181: அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்புறங்கூறான் என்றல் இனிது. மணக்குடவர் உரை:ஒருவன் அறத்தை வாயாற் சொல்லுதலுஞ் செய்யானாய்ப் பாவஞ் செய்யினும் பிறரைப் புறஞ் சொல்லானென்று உலகத்தாரால் கூறப்படுதல் நன்றாம், இது பாவஞ்செய்யினும் நன்மை பயக்கும் என்றது. பரிமேலழகர் உரை:ஒருவன் அறம் கூறான் அல்ல செயினும் – ஒருவன் அறன் என்று சொல்லுவதும் செய்யாது பாவங்களைச் செய்யுமாயினும்; புறம் கூறான் என்றல் இனிது – பிறனைப் புறம் …

019 புறங்கூறாமை Read More »