099 சான்றாண்மை

சான்றாண்மை பால்: பொருட்பால். இயல்: குடியியல். அதிகாரம்: சான்றாண்மை. குறள் 981: கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்துசான்றாண்மை மேற்கொள் பவர்க்கு. மணக்குடவர் உரை: பரிமேலழகர் உரை:கடன் அறிந்து சான்றாண்மை மேற்கொள்பவர்க்கு – நமக்குத் தகுவது இது என்று அறிந்து சான்றாண்மையை மேற்கொண்டொழுகுவார்க்கு; நல்லவை எல்லாம் கடன் என்ப – நல்லனவாய குணங்கள் எல்லாம் இயல்பாயிருக்கும் என்று சொல்லுவர் நூலோர். (சில குணங்கள் இலவாயவழியும், உள்ளன செய்துகொண்டனவாய வழியும் சான்றாண்மை என்னும் சொற்பொருள் கூடாமையின், நூலோர் இவ்வேதுப் பெயர் …

099 சான்றாண்மை Read More »