011 செய்ந்நன்றி அறிதல்

செய்ந்நன்றி அறிதல்பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல். குறள் 101: செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்வானகமும் ஆற்றல் அரிது. மணக்குடவர் உரை:முன்னோருதவி செய்யாதார்க்கு ஒருவன் செய்த வுதவிக்கு உலகமுஞ் சுவர்க்கமும் நிறையாற்றுத லரிது. பரிமேலழகர் உரை:செய்யாமல் செய்த உதவிக்கு – தனக்கு முன் ஓர் உதவி செய்யாதிருக்க ஒருவன் பிறனுக்குச் செய்த உதவிக்கு; வையகமும், வானகமும் ஆற்றல் அரிது – மண்ணுலகும் விண்ணுலகும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஒத்தல் அரிது. (கைம்மாறுகள் எல்லாம் காரணமுடையவாகலின், காரணம் …

011 செய்ந்நன்றி அறிதல் Read More »