055 செங்கோன்மை

செங்கோன்மை பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: செங்கோன்மை. குறள் 541: ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்தேர்ந்துசெய் வஃதே முறை. மணக்குடவர் உரை:ஒருவன் செய்த குற்றத்தை ஆராய்ந்து நட்டோரென்று கண்ணோடாது தலைமையைப் பொருந்தி யாவர்மாட்டும் குற்றத்திற்குத் தக்க தண்டத்தை நூல்முகத்தாலாராய்ந்து அதன் வழியே செய்வது முறையென்று சொல்லப்படும். யார்மாட்டும் என்றது தன்சுற்றமாயினு மென்றது. பரிமேலழகர் உரை:ஓர்ந்து – தன்கீழ் வாழ்வார் குற்றம் செய்தால் அக்குற்றத்தை நாடி: யார்மாட்டும் கண்ணோடாது, இறை புரிந்து – நடுவு நிலைமையைப் பொருந்தி, …

055 செங்கோன்மை Read More »