தாளபுரீஸ்வரர் திருக்கோலக்கா

தாளபுரீஸ்வரர் திருக்கோலக்கா சோழநாட்டு (வடகரை)த் தலம் சீர்காழிக்குப் பக்கத்தில் 1 கி.மீ. தொலைவில் உள்ளது. பெரிய கோயில். திருத்தாளமுடையார் கோயில் என்றழைக்கப்படுகிறது. ஞானசம்பந்தரின் யாத்திரையில் இதுவே முதல்தலம். கைகொட்டிப் பாடிய ஞானசம்பந்தருக்கு இறைவன், திருவைந்தெழுத்து பொறித்த தாளத்தையருள, அதற்குத் தெய்விகஓசையை இறைவி தந்து அருள்செய்த தலம். கோயில்வரை வண்டிகள் செல்லும். சற்றுகுறுகலான பாதை.இறைவன்-சப்தபுரீஸ்வரர், தாளேஸ்வரர், திருத்தாளமுடையார்இறைவி-தொனிப்ரதாம்பாள், ஓசை கொடுத்த நாயகிதலமரம்-கொன்றை,தீர்த்தம்-ஆனந்த தீர்த்தம். கோயிலின் எதிரில் உள்ளது. அகத்தியர், கண்வர் முதலியோர் வழிபட்டது. சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்றது. …

தாளபுரீஸ்வரர் திருக்கோலக்கா Read More »