047 தெரிந்துசெயல்வகை

தெரிந்துசெயல்வகை பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: தெரிந்துசெயல்வகை. குறள் 461: அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்ஊதியமும் சூழ்ந்து செயல். மணக்குடவர் உரை:வினை செய்து முடித்தற்கு அழியும் பொருளும் அது செய்து முடித்தாலுளதாகும் பொருளுமாய்நின்று அப்பொருளினாற் பின்புண்டாய் வரும் பயனும் எண்ணிப் பின்பு வினைசெய்ய வேண்டும். பரிமேலழகர் உரை:அழிவதூஉம் – வினைசெய்யுங்கால் அப்பொழுது அதனால் அழிவதையும், ஆவதூஉம் – அழிந்தால் பின் ஆவதனையும், ஆகி வழி பயக்கும் ஊதியமும் – ஆய் நின்று பிற்பொழுது தரும் ஊதியத்தையும், …

047 தெரிந்துசெயல்வகை Read More »