051 தெரிந்துதெளிதல்

தெரிந்துதெளிதல் பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: தெரிந்துதெளிதல். குறள் 501: அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்திறந்தெரிந்து தேறப் படும். மணக்குடவர் உரை:அறமும் பொருளும் இன்பமும் உயிரச்சமுமென்னும் நான்கின் கூறுபாட்டினையும் ஆராய்ந்து, ஆராய்ந்தபின்பு ஒருவன் அரசனால் தெளியப்படுவான். முன்பு நான்கு பொருளையும் ஆராயவேண்டுமென்றார் பின்பு தேறப்படுமென்றார். பரிமேலழகர் உரை:அறம் பொருள் இன்பம் உயிர் அச்சம் – அரசனால் தெளியப்படுவான் ஒருவன், அறமும் பொருளும் இன்பமும் உயிர்ப் பொருட்டான் வரும் அச்சமும் என்னும், நான்கின் திறம் தெரிந்து தேறப்படும் …

051 தெரிந்துதெளிதல் Read More »