052 தெரிந்துவினையாடல்

தெரிந்துவினையாடல் பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: தெரிந்துவினையாடல். குறள் 511: நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்ததன்மையான் ஆளப் படும். மணக்குடவர் உரை:நன்மையானவற்றையும் தீமையானவற்றையும் ஆராய்ந்து தீமையைப் பொருந்தாது நன்மையின்கண்ணே பொருந்தின தன்மையுடையவன் வினை செய்வானாகச் செய்யப்படும். பரிமேலழகர் உரை:நன்மையும் தீமையும் நாடி – அரசன் முதற்கண் ஒருவினையைத் தன்கண் வைத்தால், அதன்கண் ஆவனவும் ஆகாதனவும் ஆய செயல்களை ஆராய்ந்து அறிந்து, நலம் புரிந்த தன்மையான் – அவற்றுள் ஆவனவற்றையே விரும்பிய இயல்பினையுடையான், ஆளப்படும் – பின் …

052 தெரிந்துவினையாடல் Read More »