023 திருக்கோலக்கா – தக்கராகம்

திருக்கோலக்கா – தக்கராகம் 239 மடையில் வாளை பாய, மாதரார்குடையும் பொய்கைக் கோலக்கா உளான்சடையும், பிறையும், சாம்பல் பூச்சும், கீள்உடையும், கொண்ட உருவம் என்கொலோ? பொ-ரை: நீரைத் தேக்கி வெளிவிடும் மடையில் வாளை மீன்கள் துள்ளிப் பாயுமாறு பெண்கள் கையால் குடைந்து நீராடும் பொய்கைகளை உடைய திருக்கோலக்காவில் எழுந்தருளியுள்ள இறைவன், சடைமுடியையும், அதன்கண் பிறையையும், திருமேனி முழுவதும் திருநீற்றுப் பூச்சையும் இடையில் ஆடையாகக் கீள் உடையையும் கொண்ட உருவம் உடையவனாய் இருப்பது ஏனோ? கு-ரை: இது மாதர் …

023 திருக்கோலக்கா – தக்கராகம் Read More »