015 திருநெய்த்தானம் – நட்டபாடை

திருநெய்த்தானம் – நட்டபாடை 152 மை ஆடிய கண்டன், மலை மகள் பாகம் அது உடையான்,கை ஆடிய கேடு இல் கரி உரி மூடிய ஒருவன்,செய் ஆடிய குவளை மலர் நயனத்தவளோடும்நெய் ஆடிய பெருமான், இடம் நெய்த்தானம் எனீரே! பொ-ரை: கருநிறம் அமைந்த கண்டத்தை உடையவனும், மலை மகளாகிய பார்வதியை இடப் பாகமாகக் கொண்டவனும், துதிக்கையோடு கூடியதாய்த் தன்னை எதிர்த்து வந்ததால் அழிவற்ற புகழ் பெற்ற யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்த, தன்னொப்பார் இல்லாத் தலைவனுமாகிய …

015 திருநெய்த்தானம் – நட்டபாடை Read More »