மருந்தீஸ்வரர் கோயில், திருவான்மியூர்

மருந்தீஸ்வரர் கோயில், திருவான்மியூர் தொண்டை நாட்டுத் தலம். சென்னைப் பெருநகரின் தென் கடைசிப் பகுதி. சென்னை உயர்நீதி மன்றப் பகுதியிலிருந்து திருவான்மியூருக்கு நகரப்பேருந்து செல்கிறது. திருவான்மியூர்ப் பேருந்து நிலையத்தில் இறங்கிப் பக்கத்தில் உள்ள இக்கோயிலை அடையலாம். சென்னையிலிருந்து கடற்கரைச் சாலை வழியாக மாமல்லபுரம் செல்லும் பேருந்துச் சாலையில் (திருவான்மியூரில்) இக்கோயில் உள்ளது. கிழக்குக் கோபுரமே பிரதான வாயில். கிழக்கு, மேற்குக் கோபுரங்கள் புதுப்பிக்கப்பட்டுப் பொலிவுடன் விளங்குகின்றன. அழகிய சுற்றுமதில். வான்மீகி முனிவருக்கு இறைவன் நடனக் காட்சியருளிய தலம். …

மருந்தீஸ்வரர் கோயில், திருவான்மியூர் Read More »