தியாகேசர் கோவில், திருவாரூர்

தியாகேசர் கோவில், திருவாரூர் சோழநாட்டு (தென்கரை)த் தலம். மயிலாடுதுறை, சிதம்பரம், தஞ்சாவூர், திருச்சி, காரைக்கால் முதலிய ஊர்களிலிருந்து பேருந்துகள் நிரம்பவுள்ளன. இருப்புப் பாதை நிலையம். இத்தலத்தின் வடபால் சுக்கனாறும், தென்பால் ஓடம் போக்கியாறும் ஓடுகின்றன. “பிறக்க முத்தி திருவாரூர்” என்று புகழப்படும் சிறப்பினது. மூலாதாரத்தலம். ‘திருவாரூர்த்தேர் அழகு.’ பஞ்சபூதத்தலங்களுள் பிருதிவித்தலம். எல்லாச் சிவாலயங்களின் சந்நிதித்தியமும் சாயரக்ஷை எனப்படும் திருவந்திக்காப்பு நேரத்தில் இத்தலத்தில் விளங்குவதாக ஐதீகம். சுந்தரர், திருத்தொண்டத் தொகையைப் பாடுவதற்கு, அடியார்களின் பெருமைகளை விளக்கிய பெருமை இப்பதிக்கேயுரியது. …

தியாகேசர் கோவில், திருவாரூர் Read More »