011 திருவீழிமிழலை – நட்டபாடை

திருவீழிமிழலை – நட்டபாடை 108 சடை ஆர் புனல் உடையான், ஒரு சரி கோவணம் உடையான்,படை ஆர் மழு உடையான், பல பூதப்படை உடையான்,மடமான் விழி உமைமாது இடம் உடையான், எனை உடையான்,விடை ஆர் கொடி உடையான், இடம் வீழிமிழலையே. பொ-ரை: சடைமுடியில் கங்கையைத் தரித்தவனும், இடையினின்று சரிந்து நழுவும் ஒப்பற்ற கோவண ஆடையை அணிந்தவனும், மழுப் படையை உடையவனும், பலவகையான பூதங்களைப் படையாகக் கொண்டவனும், மடமைத் தன்மை பொருந்திய மான்விழி போன்ற விழிகளை உடைய உமையம்மையாகிய …

011 திருவீழிமிழலை – நட்டபாடை Read More »