மகாலிங்கசுவாமி கோவில், திருவிடை மருதூர்

மகாலிங்கசுவாமி கோவில், திருவிடை மருதூர் சோழநாட்டு (தென்கரை)த் தலம் மயிலாடுதுறை – கும்பகோணம் இருப்புப் பாதையில் உள்ள நிலையம். மயிலாடுதுறை – கும்பகோணம் பேருந்துச் சாலையில் உள்ள தலம். ‘இடைமருது’ – ‘மத்தியார்ச்சுனம்’ எனப் புகழப்படும் பதி. வடக்கே ஆந்திரத்தில் உள்ள ஸ்ரீ சைலம் (மல்லிகார்ச்சுனம்) தலைமருது என்றும்; தெற்கில் நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரத்திற்கு அருகில் உள்ள ‘திருப்புடைமருதூர்’ (புடார்ச்சுனம்) கடைமருது என்றும் வழங்கப்படும். இவையிரண்டுக்கும் இடையில் இருப்பதால் இஃது இடைமருது ஆயிற்று. (அர்ச்சுனம் – மருதமரம்) …

மகாலிங்கசுவாமி கோவில், திருவிடை மருதூர் Read More »