013 திருவியலூர் – நட்டபாடை

திருவியலூர் – நட்டபாடை 130 குரவம் கமழ் நறு மென் குழல் அரிவை அவள் வெருவ,பொரு வெங்கரி பட வென்று, அதன் உரிவை உடல் அணிவோன்,அரவும், அலைபுனலும், இளமதியும், நகுதலையும்,விரவும் சடை அடிகட்கு இடம் விரி நீர் வியலூரே. பொ-ரை: குரா மலரின் மணம் கமழ்வதும், இயற்கையிலேயே மணமுடையதுமான மென்மையான கூந்தலையுடைய உமையம்மை அஞ்ச, தன்னோடு பொருதற்கு வந்த சினவேழத்தைக் கொன்று, அதன் தோலைத் தன் திருமேனியில் போர்த்தவனும், அரவு, கங்கை, பிறை, வெண்தலை ஆகியவற்றை அணிந்த …

013 திருவியலூர் – நட்டபாடை Read More »