089 உட்பகை

உட்பகை பால்: பொருட்பால். இயல்: நட்பியல். அதிகாரம்: உட்பகை. குறள் 881: நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்இன்னாவாம் இன்னா செயின். மணக்குடவர் உரை:நிழலகத்து நீர் இனிதேயாயினும் அவற்றுள் இன்னாத செய்யும் நீர் இன்னாதாகும். அதுபோலச் சுற்றத்தார் நன்மை இனிதாயினும் அவர் இன்னாதவற்றைச் செய்வாராயின் அஃது இன்னாதாயே விடும். இது சுற்றமென் றிகழற்க என்றது. பரிமேலழகர் உரை:நிழல் நீரும் இன்னாத இன்னா – ஒருவனுக்கு அனுபவிக்க வேண்டுவனவாய நிழலும் நீரும் முன் இனியவேனும் பின் நோய் செய்வன இன்னாவாம்; …

089 உட்பகை Read More »