002 வான் சிறப்பு

வான் சிறப்புபால்: அறத்துப்பால். இயல்: பாயிரவியல். அதிகாரம்: வான்சிறப்பு. குறள் 11: வான்நின்று உலகம் வழங்கி வருதலால்தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. மணக்குடவர் உரை:மழைவளம் நிலை நிற்றலானே உலகநடை தப்பாது வருதலான், அம்மழைதான் உலகத்தார் அமுதமென்றுணரும் பகுதியது. இஃது அறம் பொரு ளின்பங்களை யுண்டாக்குதலானும், பலவகைப்பட்ட வுணவுகளை நிலை நிறுத்தலானும். இம்மழையினை மற்றுள்ள பூத மாத்திரமாக நினைக்கப் படாதென்ற நிலைமை கூறிற்று. பரிமேலழகர் உரை:வான்நின்று உலகம் வழங்கி வருதலால் – மழை இடையறாது நிற்ப உலகம் நிலைபெற்று வருதலான்; …

002 வான் சிறப்பு Read More »