048 வலியறிதல்

வலியறிதல் பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: வலியறிதல். குறள் 471: வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்துணைவலியும் தூக்கிச் செயல். மணக்குடவர் உரை:செய்யும் வினையினது வலியும் தனக்கு உண்டான வலியும் பகைவனது வலியும் தனக்கும் பகைவர்க்கும் துணையாயினார் வலியும் எண்ணிப் பின்பு வினைசெய்க. இது வலியறியும் இடம் கூறிற்று. பரிமேலழகர் உரை:வினை வலியும் – தான் செய்யக்கருதிய வினைவலியையும், தன் வலியும் – அதனைச் செய்து முடிக்கும் தன் வலியையும், மாற்றான் வலியும் – அதனை விலக்கலுறும் …

048 வலியறிதல் Read More »