092 வரைவின்மகளிர்

வரைவின்மகளிர் பால்: பொருட்பால். இயல்: நட்பியல். அதிகாரம்: வரைவின்மகளிர். குறள் 911: அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்இன்சொல் இழுக்குத் தரும். மணக்குடவர் உரை:அன்பால் கலத்தலின்றிப் பொருளால் கலக்கும் ஆய்தொடியார் சொல்லும் இன்சொல், பின்பு கேட்டினைத் தரும். பரிமேலழகர் உரை:அன்பின் விழையார் பொருள் விழையும் ஆய் தொடியார் – ஒருவனை அன்புபற்றி விழையாது பொருள்பற்றி விழையும் மகளிர்; இன்சொல் இழுக்குத் தரும் – அது கையுறும் துணையும் தாம் அன்பு பற்றி விழைந்தாராகச் சொல்லும் இனிய சொல் அவனுக்குப் …

092 வரைவின்மகளிர் Read More »