006 வாழ்க்கைத் துணைநலம்

வாழ்க்கைத் துணைநலம்பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம். குறள் 51: மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. மணக்குடவர் உரை:தான் பிறந்த குடிக்குத்தக்க வொழுக்கத்தை யுடையாளாய்த் தன்னைக் கொண்டவனது வருவாய்க்குத் தக்க செலவினை யுடையவள் இல்வாழ்க்கைத் துணையாவள். பரிமேலழகர் உரை:மனைத் தக்க மாண்பு உடையளாகித் தன் கொண்டான் வளத்தக்காள் – மனையறத்திற்குத் தக்க நற்குண நற்செய்கைகளை உடையவளாய்த் தன்னைக் கொண்டவனது வருவாய்க்குத் தக்க வாழ்க்கையை உடையாள்; வாழ்க்கைத் துணை- அதற்குத்துணை. (நற்குணங்களாவன : …

006 வாழ்க்கைத் துணைநலம் Read More »