031 வெகுளாமை

வெகுளாமை பால்: அறத்துப்பால். இயல்: துறவறவியல். அதிகாரம்: வெகுளாமை. குறள் 301: செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்காக்கின்என் காவாக்கா. மணக்குடவர் உரை:தனக்கு இயலு மிடத்தே வெகுளாதவன் வெகுளாத வனாவான்; இயலாவிடத்தில் அதனைத் தவிர்ந்ததனாலும் பயனில்லை, தவிராததனாலும் பயனில்லை; இது வெகுளாமையாவது வலியவன் வெகுளாமை யென்றது. பரிமேலழகர் உரை:சினம் செல் இடத்துக் காப்பான் காப்பான்-தன் சினம் பலிக்குமிடத்து அதனை எழாமல் தடுப்பானே அருளால் தடுப்பானாவான், அல் இடத்துக் காக்கின் என் காவாக்கால் என் – ஏனைப் பலியாத இடத்து …

031 வெகுளாமை Read More »