057 வெருவந்தசெய்யாமை

வெருவந்தசெய்யாமை பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: வெருவந்தசெய்யாமை. குறள் 561: தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து. மணக்குடவர் உரை:குற்றத்திற்குத் தக ஆராய்ந்து, ஒருவர்மேற் செல்லாமை காரணமாக உலகத்துப் பொருந்துமாறு ஒறுப்பவன் அரசன். பரிமேலழகர் உரை:‘தக்காங்கு’ நாடி – ஒருவன் தன்னின் மெலியார்மேல் சென்ற வழி அதனை நடுவாகநின்று ஆராய்ந்து: தலைச்செல்லா வண்ணத்தால் ‘ஒத்தாங்கு’ ஒறுப்பது வேந்து – பின்னும் அது செய்யாமற்பொருட்டு அவனை அக்குற்றத்திற்கு ஒப்ப ஒறுப்பானே அரசனாவான். (தக்காங்கு, ஒத்தாங்கு என்பன …

057 வெருவந்தசெய்யாமை Read More »