067 வினைத்திட்பம்

வினைத்திட்பம் பால்: பொருட்பால். இயல்: அமைச்சியல். அதிகாரம்: வினைத்திட்பம். குறள் 661: வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்மற்றைய எல்லாம் பிற. மணக்குடவர் உரை:வினையினிடத்துத் திண்மை யென்று சொல்லப்படுவது ஒருவன் மனத்து உண்டான திண்மை; அதனையொழிய மற்றவையெல்லாம் திண்மையென்று சொல்லப்படா. மற்றவையென்றது கருவியும் உபாயமும். பரிமேலழகர் உரை:வினைத் திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் – வினைசெய்தற்கண் திண்மை என்று சொல்லப்படுவது அதனை முடித்தற்குரியானொருவன் மனத்தினது திண்மை; மற்றைய எல்லாம் பிற – அஃது ஒழிந்தன எல்லாம் அதற்குத் திண்மை …

067 வினைத்திட்பம் Read More »