066 வினைத்தூய்மை

வினைத்தூய்மை பால்: பொருட்பால். இயல்: அமைச்சியல். அதிகாரம்: வினைத்தூய்மை. குறள் 651: துணைநலம் ஆக்கம் த்ருஉம் வினைநலம்வேண்டிய எல்லாந் தரும். மணக்குடவர் உரை:துணைநலம் ஆக்கத்தைக் கொடுக்கும்; வினைநலம் அவ்வளவேயன்றி வேண்டிய எல்லாவற்றையும் ஒருங்கு கொடுக்கும். துணைநலம் ஆக்கங் கொடுத்தல் எல்லாரானும் அறியப் படுதலின் ஈண்டு ஏதுவாக வந்தது. பரிமேலழகர் உரை:துணை நலம் ஆக்கம் தரூஉம் – ஒருவனுக்குத் துணையது நன்மை செல்வம் ஒன்றனையும் கொடுக்கும்; வினை நலம் வேண்டிய எல்லாம் தரும் – அவ்வளவன்றி வினையது நன்மை …

066 வினைத்தூய்மை Read More »