You cannot copy content of this page

தமிழர் வாழ்வியல்

30 வகை துவையல் ! சின்ன வெங்காயத் துவையல் தேவையானவை: சின்ன வெங்காயம் – 100 கிராம், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், பூண்டு – 4, புளி – சிறிய நெல்லிக்காய் அளவு, காய்ந்த மிளகாய் – 6, உப்பு – தேவையான அளவு, நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன், வெல்லம் – சிறிதளவு.செய்முறை: கடாயில் ஒரு ... Read More
The Science behind Rice food ! அரிசியில் அறிவியல் ! ​தமிழ் நாடு வேளாண் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அரிசியைப் பற்றி என்ன கூறுகின்றனர் எனப் பார்க்கலாம். அரிசியில் அடங்கியுள்ள மூலக்கூறுகள் அரிசியல் அடங்கியுள்ள வேதியியல் மூலக்கூறுகளானது அதனுடைய மரபு மற்றும் சுற்றுப்புறச்சூழ்நிலையை சார்ந்தே அமைகின்றது. இந்திய அரிசியில் ஈரப்பதம் 10.9 – 13.8, புரதம் 5.5-9.31, மாவுச்சத்து 73.4-80.8, நார்ச்சத்து 0.2-1.0 மற்றும் தாது உப்புக்கள் 0.8-2.0 சதவீதமாகும் ... Read More
ஆனந்தம் விளையாடும் வீடு! நம் அனைவருக்கும் வேரென இருப்பது நம் குடும்பமே. கணவன் – மனைவி உறவு தெய்வீகமானது. கணவனுக்குத் தெரியாமல் மனைவியோ, மனைவிக்குத் தெரியாமல் கணவனோ சம்பாதிப்பதும், செலவு செய்வதும், சேமிப்பதும் சரியாக இருக்காது. அது பிரச்சினைகளுக்கு இடம்தரும். மனதில் ஒளிவு மறைவு வைத்துக் கொண்டிருந்தால் அங்கே தெய்வீக உறவு இருக்காது. `உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி’ என்ற மகாகவி பாரதியின் இரண்டு ... Read More
ஆரோக்ய உணவு! ‘எண்சாண் உடம்பிற்கு வயிறே பிரதானம்’ என ஒரு பழமொழி உண்டு. இதை பல இடங்களில் சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் உபயோகித்தாலும் இதன் முதன்மை வயிற்றைப் பேணிக் காக்க வேண்டும் என்பதுதான். உடலை ஆரோக்கியமாக வைக்க நாம் செய்ய வேண்டியது சூரிய ஒளி- காலை சூரியஒளி படுமாறு சூர்ய வணக்கம் செய்யுங்கள். காற்று சூரிய ஒளியின் அணுக்கள் நம் உடம்பில் பல தேவையான இயற்கை மாற்றங்களைச் செய்யும். நல்ல சுவாசம்- ... Read More
சடங்கு எனும் சொல்சடங்கு என்ற சொல்லிற்குச் ‘சட்ட’ என்ற உரிச்சொல் வேர்ச் சொல் ஆகும். சட்ட + அம் + கு = சடங்கு ‘சட்ட’ என்ற சொல்லிற்கு செவ்விதான, ஒழுங்கு முறையான என்று பொருள். ‘அம்’ என்ற சொல் அழகியது என்று பொருள் உடையது ‘கு’ என்பது தன்மையைக் குறித்ததோர் விகுதி. பண்பு+அம்+கு = பாங்கு என்று ஆகியது போல சட்ட+அம்+கு = சடங்கு என்று ஆகியது. “சட்ட ... Read More
இந்து வாழ்க்கை முறையில் உணவை எப்படி, எங்கே யார் மூலம் செய்யப்பட்டு பரிமாறப்பட்டு சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியமானது. அன்னம் என்பது ப்ராணனைத் தாங்குவது. ஆகவே அதை யார் சமைக்கிறார்கள், எப்படி சமைக்கிறார்கள் என்பதும் கூட முக்கியம் தான். உணவில் ஐந்து தோஷங்கள் உண்டு. 1) அர்த்த தோஷம்2) நிமித்த தோஷம்3) ஸ்தான தோஷம்4) ஜாதி தோஷம்5) சம்ஸ்கார தோஷம் அர்த்த தோஷம் இது பொருளால் வரும் தோஷம் – ... Read More
கர்ப்பிணிப் பெண்களுக்கான உணவு கருவுற்ற பெண் மூன்று ‘G’ நிறைய சாப்பிட வேண்டும். Green leaves – கீரை வகைகள்Green vegetables – பச்சைக் காய்கறிகள்Grains – முழு தானியங்கள்முழு தானியங்கள் என்றால் அதிகம் பாலிஷ் போடாத கோதுமை மற்றும் அரிசி சாதம், கஞ்சி போன்றவை நல்லது. புழுங்கலரிசி உபயோகிப்பது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. மல்லிகைப் பூ போன்ற பச்சரிசி சாதம், சத்தில்லாத சக்கைதான். அதிக refine செய்யப்பட்ட ... Read More
சமைத்த உணவு சுவையாக இருக்கவேண்டும் என்றால், வாங்கும் காய்கறிகள் நல்லதாக இருக்கவேண்டும். அதை சத்துள்ள, ஃப்ரெஷ்ஷான காய்களாகத் தேர்ந்தெடுப்பது ஒரு கலை. சிலருக்கு காய்கறிகளை எப்படிப் பார்த்து வாங்க வேண்டும் என்பது பிடிபடுவதில்லை. ஒவ்வொரு காய்கறியையும் எப்படி தரம் பார்த்து வாங்கவேண்டும். அப்படி, நீங்கள் வாங்கும் காய்கறிகளில் அவசியம் கவனிக்க வேண்டியவை இதோ: கீரை வகைகள்: கீரைகள் அன்று பறித்ததாய், புதியதாய், பசுமையாக, முகர்ந்து பார்த்தால் கெட்ட வாடை ஏதும் ... Read More
காய்ச்சல் குணமாக சித்த வைத்தியம் அனைத்து வகையான காய்ச்சலையும் (Fever) குணப்படுத்தும் அரு மருந்து நம் உடலின் வெப்பநிலை குறிப்பிட்ட அளவை (100.4 F) விட உயர்ந்து காணப்படும் போது காய்ச்சல் ஏற்படுகிறது. பல காரணங்களினால் நமக்கு காய்ச்சல் வந்தாலும் பல நேரங்களில் நுண் கிருமிகள் மற்றும் விஷக்கிருமிகளின் தாக்கத்தால் தான் காய்ச்சல் வருகிறது. சில நேரங்களில் அதிகமான வேலைப்பளு மற்றும் அசதி, ஜலதோசம் போன்ற நேரங்களிலும் காய்ச்சல் வருவதுண்டு ... Read More
நோயில்லா வாழ்க்கை வேண்டுமா? கிராமங்களைச் சரணடையுங்கள்! ‘தீரா நோய் தீரணுமா? கிராமத்துக்குப் போங்க’ என்று ஒரு சொலவடை உண்டு. ‘அது எப்படி கிராமங்கள் நோய்களைத் தீர்க்கும்? கிராமங்கள் என்ன மருத்துவமனைகளா? இல்லை பெட்டி பெட்டியாய் மருந்துகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் மருந்தகங்களா?’ என்று கிராமங்களைப் பற்றி முழுமையாக அறிந்திடாத நகரவாசிகள் நையாண்டியாக கேள்வி எழுப்பலாம். மருத்துவர்களையும், மருந்தகங்களையும் நகரத்துவாசிகள் அடிக்கடி பார்த்து பழகிவிட்டதால் இந்த கேள்வி எழுவதில் நியாயம் உண்டு. வயல்வெளி ... Read More
கிழங்கு வகைகள் அறிவோம் ! பொரித்துச் சாப்பிடுவதைவிட வேகவைத்துச் சாப்பிடுவது நல்லது. வெறும் கிழங்கை மட்டும் தனியாகச் சாப்பிடுவது ஆரோக்கியமானதல்ல. சில கிழங்குகளில் கொழுப்புச்சத்து அதிகமாக இருக்கும்; சில கிழங்குகளில் தாதுப்பொருள்கள் அதிகம் இருக்கும். சாம்பார், குழம்பு வகைகள், சாலட், சூப் செய்யும்போது, காய்கறிகளோடு சேர்த்துக் கிழங்குகளை வேகவைத்துச் சாப்பிடலாம். அனைத்துச் சத்துகளையும் ஒருசேர எடுத்துக்கொள்ளும் இந்த முறை, ‘பேலன்ஸ்டு டயட்’ (Balanced Diet) எனப்படுகிறது. கிழங்கை எப்படிச் சாப்பிடக் ... Read More
கைமருத்துவம் சளி, இருமல் நீங்க: திப்பிலி, அக்கரா, சுக்கு, மிளகு, மஞ்சள் செய்முறை: இந்த ஐந்து மருந்துகளையும் நன்றாக அரைத்து பொடியாக்கி ஒரு டப்பாவில் போட்டு வைத்து தினமும் காலை அல்லது இரவில் அரை டீஸ்பூன் எடுத்து அதை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் சளி, இருமல் குறையும். வென்னீரிலும் கலந்து சாப்பிடலாம். உடலில் புளிப்பு அதிகம் இருப்பின்: இஞ்சி, வெற்றிலை, பூண்டு, மல்லி செய்முறை: இதை நன்றாக அம்மியில் ... Read More
சமையல் டிப்ஸ் குழம்பிலோ, ரசத்திலோ உப்பு அதிகமாக இருந்தால் இரண்டு பிடி சோற்றை உருட்டி அதில் போட்டு விட்டால், அதிக உப்பை அந்த சோற்று உருண்டை உறிஞ்சிக் கொள்ளும். பாயாசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரிச்சம் பழத்தை பொடியாக நறுக்கி வைத்து நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும். தேங்காய்த் துருவல் மீதியானால், அதை லேசாக வதக்கி சிறிது உப்பு சேர்த்து வைத்தால் மறுநாள் சமையலுக்குப் பயன் படுத்திக் கொள்ளலாம். உளுந்துவடை ... Read More
தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்த்தால் ரசம் மிகவும் ருசியாக இருக்கும்எந்த கறை ஆடையில் பட்டாலும் சிறிது வினிகர் போட்டு துவைத்தால் கறை இருந்த இடம் தெரியாது.ஆப்ப சட்டி பணியார சட்டிகளி்ல் எப்பொழுதும் எண்ணெய் தடவியே வைத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஆப்பம் பணியாரம் செய்யும்போது எளிதாக செய்யலாம்.கொதிக்கவைத்து ஆறிய நீரில் சீரகப் பொடியை போட்டு 12 மணி நேரம்ஆகி குடித்தால் இரத்த கொதிப்பு சீராகும்.மண்பாத்திரம் புதிதாக வாங்கினால் அதில் சிறிது ... Read More
செண்பகப்பூ! மைக்கேலிய செம்பகா… இது செண்பக மரத்தின் தாவரவியல் பெயர். செண்பகம் என்ற பெயரில் ஒரு பறவை இருப்பது கூடுதல் தகவல். மேற்குத்தொடர்ச்சி மலைக் காடுகளில் தானாகவே வளரும் செண்பக மரம், மேல்நோக்கிக் குவிந்த இலைகளையும் நறுமணமுள்ள மஞ்சள் மற்றும் வெள்ளை நிறமுள்ள மலர்களையும் உடையது. இரண்டு செண்பக மரங்களை வீட்டில் வளர்த்தால் சொர்க்கத்தைக் காணலாம் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. மேலும், `சௌபாக்ய விருட்சம்’ என்ற சாஸ்திரப் பெயரைக் கொண்டுள்ள ... Read More
சமையலில் பயன்படுத்தும் மணமிக்க உணவுப் பொருளான சோம்பு, உடல் எடையைக் குறைக்க உதவும். அதிலும் அதனை தண்ணீருடன் சேர்த்து குடித்து வந்தால், உடல் பருமன் குறையும். ஆயுர்வேத மருத்துவத்தில் உடல் பருமனை குறைக்க சோம்பு தண்ணீர் பரிந்துரைக்கப்படுகிறது. சோம்பில் உடலை சுத்தப்படுத்தும், மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன. சோம்பு தண்ணீர் குடித்து உடல் எடையைக் குறைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் பலன் தாமதமாக கிடைத்தாலும், நிரந்தரமாக இருக்கும் ... Read More
தமிழர் திருநாள் பொங்கல்
தமிழர் திருநாள் பொங்கல் தை மாதம் முதல் தேதியன்று, பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. தை மாதத்தைத் தமிழர்கள் மங்கள மாதம் என்றும் போற்றுகின்றனர். அதிகாலையில் பிரம்மாவாகவும், மதிய வேளையில் சிவனாகவும், மாலையில் விஷ்ணுவாகவும், மும்மூர்த்தி ஸ்வரூபமாக விளங்கும் சூரிய பகவானை இந்நாளில் வணங்குவதே தைப்பொங்கல். பொங்கல் விழாவைத் தமிழர் அனைவரும் சமயங்களைக் கடந்து கொண்டாடுகின்றனர். ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பது பழமொழி. தை முதல் தேதியில் உழவுக்கு உதவியாய் ... Read More
தமிழ் எண்கள் அறிவோம் ! எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்என்பார் ஔவையார். குறள் 392:. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்கண்ணென்ப வாழும் உயிர்க்கு என்பது தெய்வப்புலவர் திருவள்ளுவர் பெருமான் வாக்கு. தமிழ் எண் வடிவங்கள் பிற தமிழ் எழுத்துக்களின் வடிவங்களை மிகவும் ஒத்து காணப்படும். தமிழ் எண்களும் கிரந்த எண்களும் ஒரே எண் வடிவைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. எனினும் கிரந்த எண்களைப் போல் தமிழில் சுழியம் கிடையாது. எண் ... Read More
திருவாச்சி மரம் அல்லது மந்தாரை மரம், இளமஞ்சள் நிறத்தில் அழகிய மலர்களை உடைய, இளம்பச்சை நிற இலைகளைக் கொண்ட திருவாச்சி, இன்று மிக அரிதாகக் காணப்படும் ஒரு குறுமரமாகிவிட்டது. சிருவாச்சி, இருவாச்சி, திரு ஆத்தி, மந்தாரை எனப் பல பெயர்களில் அழைக்கப்படுவது போலவே, திருவாச்சி மரமும் பல விதங்களில் மனிதரின் வியாதிகள் தீர, மருத்துவப் பலன்கள் தருபவை. ஆன்மீகத்திலும், சித்த வைத்தியத்திலும் பெரும் பயனாகும், திருவாச்சி, தமிழ் சங்கீத இசை ... Read More
தீபாவளி
தீபாவளி. இந்து மத கலாச்சார பழக்க, வழக்கங்களில் சாஸ்த்திரம், சம்பிரதாயம், திருவிழாக்கள், பண்டிகைகள், போன்றவைகள் மனிதகுல வாழ்க்கையின் நல் வாழ்விற்காக உருவாக்கப்பட்டவைகள் ஆகும்.. தீபாவளி பண்டிகை, இந்துக்களின் முதன்மையான பண்டிகைகளில் ஒன்று. நரகாசுரன் வதம் செய்யப்பட்ட தினத்தைத்தான் தீபாவளியாக உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் கொண்டாடுகிறார்கள். தீபாவளி என்பது சமஸ்கிருத சொல்லாகும். சமஸ்கிருதத்தில் ‘தீபம்’ என்றால் விளக்கு, ‘ஆவளி’ என்றால் வரிசை என பொருட்படும். எனவே, தீபாவளி என்பது வரிசையாக விளக்குகள் ... Read More
தீராத தலைவலிக்கு தீர்வு: இன்றைய இயந்திர வாழ்க்கையில் மைக்ரேயன் எனப்படும் ஒற்றை தலைவலி பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் இப்பிரச்னை வருகிறது. துாக்கமின்மை, கால நேரம் தவறி உணவு அருந்துதல், அஜீரண கோளாறு, தேவையற்ற சிந்தனை, மன உளைச்சல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒற்றை தலிவலி வருகிறது. கம்ப்யூட்டர், மொபைல் போன் அதிக நேரம் பார்ப்பது, காற்றோட்டம் இல்லாத அறையில் இருப்பது, சில வாசனைகளை நுகர்வது போன்ற ... Read More
நெய்யை எந்த உணவுடன் சேர்த்து உண்பது உடலுக்கு நன்மை தரும்? நெய்யை உணவில் சேர்த்து சாப்பிடும் போது, கட்டயமாக உப்பு சேர்த்து உண்ண வேண்டும். மதிய உணவில் அரை தேக்கரண்டி நெய் சேர்த்து உண்பது நல்லதாகும். உணவில் முதல் கவளத்திலேயே நெய் பிசைந்து உண்ண வேண்டும். உப்பில்லாமல் நெய் சேர்த்து உண்பதை கட்டாயமாக தவிர்த்து விடுங்கள். தோசை சுடும் போதும் எண்ணெய்க்கு பதிலாக நெய் சேர்த்து சுட்டால், நெய்யை மிகக் ... Read More
வித விதமான குழம்பு வகைகள் ! 1 பூண்டு-வெங்காயக் குழம்பு தேவையானவை: நாட்டுப் பூண்டு – 4 பல், சாம்பார் வெங்காயம் – 10, சாம்பார் பொடி – 4 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, காய்ந்த மிளகாய் – 1, கடுகு, மிளகு,சீரகம்,வெந்தயம்,பெருங்காயம் – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் – அரை கப், கறிவேப்பிலை ,கொத்தமல்லி – சிறிதளவு, புளித் தண்ணீர் – ஒரு கப் ... Read More
1 சுக்குப்பொடி குழம்பு தேவையானவை: சுக்குப்பொடி – கால் கப், பொடித்த வெல்லம் – ஒரு டீஸ்பூன், புளி – 50 கிராம், தேங்காய்ப்பால் – கால் கப், கடுகு – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும். சுக்குப்பொடி போட்டு லேசாக வதக்கி, புளிக் கரைசலை விடவும். உப்பு, பொடித்த வெல்லம் சேர்த்து கொதிக்க விட்டு… கெட்டியானதும், ... Read More
பக்குவம் கவியரசு கண்ணதாசன் கல்லூரியில் படிக்கும்போது, ஒரு இளைஞனுக்கு எல்லாமே வேடிக்கையாகத் தெரிகிறது. கல்யாணமாகிக் குழந்தை குட்டிகளோடு அவன் வாழ்க்கை நடத்தும்போது, ஒவ்வொரு வேடிக்கைக்குள்ளும் வேதனை இருப்பது அவனுக்குப் புரிகிறது. இளமைக் காலத்து ஆரவாரம், முதுமை அடைய அடையக் குறைந்து வருகிறது. ஒவ்வொரு துறையிலும், நிதானம் வருகிறது. இளம் பருவத்தில் இறைவனைப்பற்றிய சிந்தனை அர்த்த புஷ்டியற்றதாகத் தோன்றும். வாழ்வில் அடிபட்டு வெந்து, நொந்து ஆண்டவனைச் சரணடைய வரும்போது, அவனது மாபெரும் ... Read More
ஆடி வெள்ளி, ஆடிச் செவ்வாய், ஆடிக் கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், நாகபஞ்சமி, கருடபஞ்சமி, ஹயக்ரீவர் ஜெயந்தி, ஆவணி அவிட்டம், கோகுலாஷ்டமி போன்ற பண்டிகைகளுக்கு ஏற்ற பலகாரங்கள். ஆடிப்பால் தேவையானவை: தேங்காய் – ஒன்று, துருவிய வெல்லம் – அரை கப், ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன், பச்சரிசி (அ) வறுத்த பாசிப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன். செய்முறை: தேங்காயைத் துருவி, வறுத்த பாசிப்பருப்பு (அ) பச்சரிசி சேர்த்து நீர்விட்டு ... Read More
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
2020 நமக்கு எல்லா நலன்களையும், வளங்களையும் தரும் இனிய ஆண்டாக அமைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம் ! ... Read More
வயிற்று வலி வருவதற்கு செரிமானக் கோளாறு, மலச்சிக்கல், வாயு தொல்லை, பூச்சித் தொல்லை, வயிற்றுப் பொருமல், உணவு நச்சு முதலியனவாகும். கெட்டுப்போன உணவை உண்பது அதிகப்படியான உணவை உண்பது, சூடு, வாய்வு தொல்லை போன்ற பல காரணங்களும் உண்டு. நடு வயிற்றிலும், வலது பக்க விலாவுக்குக் கீழும் வலி வந்தால், அது வயிற்றுப் புண்ணாகவோ, பித்தப்பைக் கல் வலியாகவோ, கணைய அழற்சி வலியாகவோ இருக்கலாம். இரைப்பை, குடல் பகுதிக்குப் போகும் ... Read More
வாழை இலை மற்றும் பழங்களின் மகத்துவங்கள் வாழை இலையின் நீர் உறியாதன்மையாலும், வசதியாகயிருப்பதாலும் தென்னிந்தியா, பிலிப்பீன்சு, கம்போடியா உணவு வகைகள் பெரும்பாலும் இவ்விலையிலேயே பரிமாறப்படுகிறது. தமிழ் நாடு, கேரளம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகம் பகுதிகளில் முக்கிய விழாக்காலங்களில் வாழையிலையில் மட்டுமே உணவு பரிமாறப்படுகிறது. உணவின் மணத்தை அதிகரிக்க வாழை இலை பயன்படுகிறது. பதார்த்தங்களுடன் வேகவைப்பதால் மெல்லிய சுவை கொடுக்கிறது. மேலும் உணவை மடித்துக் கட்டவும் பயன்படுகிறது. இலையில் உள்ள ... Read More
வித விதமான (மண்டி) தொக்கு! தினம் ஒரு தொக்கு செய்து பரிமாறிப் பாருங்கள், ‘சொக்கு’ப் பொடி போட்டது போல அனைவரும் உங்களைச் சுற்றி வருவர். உப்பு, புளி, காரம் போன்றவற்றை சுவைக்கேற்ப கூட்டியோ, குறைத்தோ சேர்த்துக் கொள்ளலாம். உப்பு, புளி, காரம் மூன்றும் சிறிது தூக்கலாக இருந்தால்தான் தொக்கு ருசிக்கும்! செட்டிநாடு வெண்டைக்காய் மண்டி. தேவையானவை வெண்டைக்காய் – கால் கிலோ அரிசி களைந்த நீர் – 2 கப், ... Read More
[இங்கு கொடுக்கப்பட்டுள்ள உணவு வகைகளை உங்கள் குடும்ப மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று அவர் பரிந்துரை செய்தால் மட்டுமே உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.] திருக்குறள் பால்: பொருட்பால்அதிகாரம்: அறிவுடைமை குறள் 423: எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்ப தறிவு. மு.வரதராசன் விளக்கம்:எப்பொருளை யார் யார் இடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப் பொருளின் மெய்யானப் பொருளைக் காண்பதே அறிவாகும். சாலமன் பாப்பையா விளக்கம்:எந்தக் கருத்தை எவர் சொன்னாலும், அக்கருத்தின் ... Read More
வித விதமான கீரை சமையல் தினமும் ஒரு கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது மருத்துவர்களின் பரிந்துரை. பல்வேறு சத்துக்களையும், விட்டமின்களையும் தன்னகத்தே அடக்கிய கீரையை வாரம் ஓரிரு முறையாவது சாப்பிட வேண்டியது அவசியம். கீரை டிப்ஸ்… கீரையுடன் சிறிது எண்ணெய் விட்டு வேக வைத்தால், பசுமை மாறாமல் இருக்கும். வல்லாரைக் கீரை சாப்பிடுவதால் ஞாபகசக்தி அதிகரிக்கும் என்பது உண்மையே. அதற்காக, அள்ளி வைத்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தால் ... Read More
வித விதமான கூட்டு வகைகள் அறுசுவையான உணவில் கூட்டு என அழைக்கப்படும் காய்கறிகளும் பருப்பும் சேர்ந்து சமைக்கப்படும் உணவு பதார்த்தர்த்திற்கு சிறப்பான இடமுண்டு. கூட்டு மிகவும் கெட்டியாகவும் இல்லாமல், குழம்பு போல தண்ணீராகவும் இல்லாமல் இடைப்பட்ட பதத்தில் சமைக்கப்படும் பண்டமாகும். கூட்டுடன் சாதம் என்பது ஒரு முழுமையான உணவாக கருதப்படுகிறது. காய், பருப்பு, தேங்காய், உப்பு, காரம் என்று எல்லாம் கலந்த கலவையில் கூட்டு தயாரிக்கப்படுகிறது. மேலும் எண்ணெய் குறைவாக ... Read More
இட்லி தோசைக்கு ஏற்ற சட்னி வகைகள்..! மதுரை மிளகாய் சட்னி!!! காய்ந்த மிளகாய் – 20தக்காளி – 2பூண்டு – 3 பல்பெருங்காயத்தூள் – 1/2 ஸ்பூன்உப்பு – தேவையான அளவுகருவேப்பிலை – தேவையான அளவுநல்லெண்ணெய் – தேவையான அளவு முதலில் காய்ந்த மிளகாயை தண்ணீரில் ஊற வைத்து கொள்ள வேண்டும். பின்னர் ஊற வைத்த மிளகாயுடன் தக்காளி , பூண்டு, கருவேப்பிலை , உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் ... Read More
வித விதமான சூப் வெஜிடபுள் சூப் தேவையானவை வேக வைத்த பருப்பு ஒரு மேசைக்கரண்டி கிராம்பு – 2, ஏலம் – 2 பட்டை – ஒரு சிறிய துண்டு அரைத்த இஞ்சி – அரை தேக்கரண்டி சிறிய பூண்டு – 5 பற்கள் நறுக்கிய புதினா – ஒரு மேசைக்கரண்டி நறுக்கிய கொத்தமல்லி – 2 மேசைக்கரண்டி நறுக்கிய சிறிய வெங்காயம் – கால் கப் நறுக்கிய தக்காளி ... Read More
வித விதமான தயிர் உணவுகள் தயிர் தக்காளிச் சட்னி தேவை: தக்காளி – கால் கிலோ, பச்சை மிளகாய் – 5, புளிக்காத தயிர் – கால் கப், கொத்தமல்லி – சிறிதளவு, கடுகு – கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – ஒன்று, உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – 2 டீஸ்பூன். செய்முறை: தக்காளி, பச்சை ... Read More
வித விதமான துவையல் தேங்காய் துவையல் : தேவையான பொருட்கள்: தேங்காய்-1 மூடி உப்பு-1/2 புளி வரமிளகாய் -4 தாளிக்க: எண்ணெய் -1தே .க கடுகு-1 தே .க உளுந்தம்பருப்பு -1 தே .க பெருங்காயம் -1/2 தே .க கறிவேப்பிலை-2 கொத்து செய்முறை: கடாயில் என்னை காய வைத்து மேலே குறிப்பிட்டுள்ள தாளிக்க பொருட்களை தாளித்து கறிவேப்பிலை சேர்த்து தயாராக வைத்துக்கொள்ளவும். தேங்காய், உப்பு, புளி ,வரமிளகாய் சேர்த்து ... Read More
வித விதமான தோசை வகைகள் தோசை என்பது உளுந்து மற்றும் அரிசி கொண்டு தயாரிக்கப்படும் உணவுப் பதார்த்தம் ஆகும். தென் இந்தியா மற்றும் இலங்கைத் தமிழர்களிடையே பல பகுதிகளில் மிகவும் புகழ்பெற்ற உணவு. வெந்தயம் – தோசை மாவில் வெந்தயம் சிறிது அளவு சேர்த்து அரைக்கப்படும் அதனால் தோசைக்கு சற்று சிவந்த நிறம் ஏற்படும். இது சேர்ப்பதால் உடலுக்கும் நல்லது குளிர்ச்சியை தரும் தோசையின் சுவையினைக் கூட்டுவதற்கும் இந்த பதார்த்தங்கள் ... Read More
பச்சடி என்பது ஒரு பாரம்பரிய தென்னிந்திய வகை உணவாகும். இது உணவின் போது தொட்டுக் கொள்ள உதவும் பக்க உணவாக பரிமாறப்படுகிறது. பரவலாக தென்னிந்திய மொழிகளில் பச்சடி ஒரு துரித உணவைக் குறிப்பதாகவும் உள்ளது. கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் வட இந்திய ராய்தாவைப் போன்ற ஒரு காய்கறி உணவாக பச்சடியை கருதுகிறார்கள். இது காய்கறி, தயிர், தேங்காய், இஞ்சி மற்றும் கறி வேப்பிலை இலைகளுடன் கடுகு சேர்த்து ... Read More
‘சமய சஞ்சீவினி’யாக கைகொடுத்து உதவுவதில் பொடிகள் முக்கிய இடம் பெறு கின்றன. மேலும் சாம்பார், ரசம், கூட்டு, பொரியல் என்று எல்லாவற்றிலும் சுவை சூப்பராக அமைவதில், பொடிகளின் பங்கு ரொம்பவே உண்டு. பருப்புப்பொடி தேவையானவை: துவரம்பருப்பு – 2 கப், கடலைப்பருப்பு – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 6, மிளகு – ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு. செய்முறை: வாணலியில் ... Read More
வித விதமான பொரியல் காய்கறியில் தான் எத்துணை வகை! கணக்கிலடங்கா கறிவகையும் அதன் சுவையும் அருமை. பிரட்டல், துவட்டல்,கூட்டு, பொரியல் பச்சடி, மண்டி, கோலா இன்னும் பல. நம் நாக்கின் சுவை அரும்புகள் மலரும் வண்ணம் சமைத்து மகிழ்வோம். வாழைத்தண்டு பொரியல் : வாழைத் தண்டு நார் சத்து மிகுந்தது. மேலும் அதிக நீர் சத்து உடையதாகவும் இருக்கிறது. சிறுநீரக கல்லை கரைக்கும் சக்தி கொண்டதாகும். உடல் பருமனை குறைக்கும் ... Read More
ரசம் என்பது தென்னிந்திய மக்களின் உணவு வகைகளில் மிகவும் முக்கியமான ரெசிபி ஆகும். இதை எல்லாத் தருணங்களிலும் பொதுவாக எல்லா வீடுகளிலும் செய்து மகிழ்வர். சித்த வைத்திய முறைப்படி நம் உணவில் தினசரி துணை உணவுப் பொருட்களாக வெள்ளைப் பூண்டு, பெருங்காயம், மிளகு, சீரகம், புதினாக்கீரை, கறிவேப்பிலை, கொத்துமல்லிக்கீரை, கடுகு, இஞ்சி முதலியன சேர வேண்டும். இந்த ஒன்பது பொருட்களும் ஆங்காங்கே நம் உணவில் சேருகிறது என்றாலும், ஒட்டு மொத்தமாகச் ... Read More
நிலக்கடலை என அழைக்கப்படும் வேர்கடலை ஃபேபேசீஸ் குடும்பத்திற்கு சொந்தமானது, மேலும் வேர்க்கடலை அதன் சாப்பிடக் கூடிய விதைகளுக்காக முக்கியமாக பயிரிடப்படுகிறது. வேர்கடலையில் புரதங்கள், எண்ணெய் மற்றும் நார்ச்சத்துகள் மிகுந்த அளவில் இருக்கிறது என்று கூறப்படுகிறது. எனவே உங்கள் நாவின் சுவை மொட்டுகளுடன் சேர்த்து நம் உடலுக்கும் வேர்கடலை ஒரு விருந்து ஆகும். பாலிபினால்கள், ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற பிற செயல்பாட்டு சேர்மங்களும் இந்த மொறுமொறுப்பான கொட்டைகளில் உள்ளன ... Read More
Scroll to Top